Tuesday, September 30, 2008

மனதோடு மழை காலம்


நீ பார்க்கும் பார்வை ஒரு பொழுதில் மறையாது ..
உன் விரலின் தீண்டல்.... என் உயிரை பிரியாது ...
உன் கூந்தல் பூ வசமேன் வாழ்வின் சுவாசம்
உயிர் கொண்ட பதுமையே ..உயிர் கொண்டு சென்றதேன்
உன்னை பிரிய வைத்தேன் ..
நிஜமெல்லாம் எனை மறக்க நினைவெல்லாம் எனை வெறுக்க
தனியாய் தான் நிற்க வைத்தாய்
பிரியாத வரம் ஒன்றை தான் கொடுத்தாய்
வரம் இன்று சாபமாய் போனதேன்
உன்னை மறக்க மனமில்லை நினைவிழக்க வழிஇல்லை
உன் நினைவை என் மனம் தாங்கும் போதெல்லாம் என் மனதோடு மழை காலம் ......

1 comment:

Anonymous said...

unarvugaL unmayOdu irukkum bOdhu dhaan ,
Kavidhayum uyir perum ...
Un manadhil mazhai peidhadhil,
Yen manam sillidugiradhu :)!