Saturday, November 1, 2008

சில கிறுக்கல்கள்

கருப்பு நிற கதிரவன் ஒளி வீசுகிறான் !என்னவள் கண்களில் ....
நீர் இருந்தால் தான் மீன் வாழ முடியும் அதுபோல் .....நீ இருந்தால் தான் நான் வாழமுடியும் ..
உண்மையோ !பொய்யோ !ரசிபேன் நீ பேசினால்

இன்னும் இனிக்கிறது,நீஎனக்குத் தந்த முதல் முத்தம்.
கடற்கரையின் ஈரக்காற்றோடு போரிட்டஉன் உஷ்ணக்காற்று,சிப்பி சேகரித்த கைகளோடுநீ இட்ட முத்து முத்தம்.
உன்னையும் என்னையும் சுற்றிஉலகமே வேடிக்கைபார்த்ததாய்எனக்குத் தோன்றநீயோ கடல் மணலில்உலகப்படம் வரைந்து கொண்டிருந்தாய்.
பூக்காரியைப் புறக்கணித்து,சுண்டல் காரனைத் துரத்தி,பிச்சைக்காரனுக்கு மட்டும் காசு போட்டதன் காரணம்எனக்கு விளங்கவில்லை.
பின்பு ஒரு நாள் சொன்னாய்.தானம் தரும் ஒவ்வொரு காசும்காதலைக் காப்பாற்றும் என்றுஉண்மை தானோ என்று யோசித்திருக்கிறேன்.
பள்ளிச்சிறுமி கண்டெடுத்தபவள மாலையாய்இதயத்தீவுக்குள் உன் முத்தத்தைஇறுக்கமாய்ப் பற்றியிருந்தேன்.
அதற்குப்பின்உதடுகள் வலிக்கும் வரை,உணர்வுகள் சலிக்கும் வரைபலமுறை முத்தமிட்டிருக்கிறாய்.
ஆனாலும்அந்த முதல் முத்தம் தந்த பள்ளம்நிரம்பிவிடவேயில்லை.நேற்றுநம் குழந்தை முதல் முதலாய்உதடு குவித்துஎன் கன்னதில் முத்தமிடும் வரை !!!